திருப்பூர்: திருப்பூர் காங்கயம் காங்கயம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு உறுதிமொழி மற்றும் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியில் காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.காமராஜ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. மகேஸ்வரன் மற்றும் போலீசார், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலர் பங்கேற்றனர்.