கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் பண்ருட்டி நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் நகரின் பிரதான சாலையாக விளங்கும் ராஜாஜி சாலை மார்க்கமாக இயங்கும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழ், காப்பீடு சான்றிதழ் நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியும், அதிகப்படியான பள்ளி மாணவர்களையும், பொது மக்களையும் சவாரி ஏற்றி செல்ல கூடாது எனவும், குடிபோதையில் வாகனம் இயக்கக் கூடாது எனவும், அதிக ஒலி எழுப்பக் கூடிய Air Horn உபயோகிக்க கூடாது என எச்சரித்தும், ராஜாஜி சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை இயக்கவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
















