திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்பி. வெள்ளைச்சாமி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் துறை உதவி பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் சாலை பாதுகாப்பு காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்தில், டி.சி.ஆர்.பி ஏ. டி.எஸ்.பி சிவகுமார் உடன் இருந்தார். பட்டிவீரன்பட்டி பகுதியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை,ரூ.10 ஆயிரம் அபராதம் – திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2016-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்த விக்னேஷ்(29), என்பவரை பட்டிவீரன்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போலீஸ் ஏஸ்.பி. பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில், பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர். ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி, விக்னேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி