திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்களால் 2025-2026 ம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு படை துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் 38 பள்ளிகளிலிருந்து சுமார் 1400 மாணவச் செல்வங்கள் மற்றும் 101 சாலை பாதுகாப்பு வார்டன்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K.பவானீஸ்வரி இ.கா.ப அவர்கள் சாலை பாதுகாப்பு படை உறுதி மொழியை முன்மொழிந்தார்கள். ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளையும்,பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைத்து, சாலை பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும், சாலை பாதுகாப்பு மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு