திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் அவர்கள் உத்தரவின்படி, அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் திரு. மகேஷ்குமார் அவர்கள் மற்றும் காவல் துறையினர் மற்றும் ஊர் காவல் படையினர் இணைந்து அம்பாசமுத்திரம், பூக்கடை பஜார் பகுதியில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் இரவு நேரங்களில் பயணம் செய்யும் போது மற்றவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் முகப்பு ஒளி அதிக வெளிச்சத்துடன் அமையக்கூடாது என்றும், வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும், பயணத்தின்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்தும், சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விபத்தினை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி அம்பாசமுத்திரம் காவல் துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.