நெல்லை: நெல்லை மாவட்டம், அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திரு. ராமகிருஷ்ணன் (56). இவர் சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் தாயார் உடல் நலக்குறைவால் காலமானதால், சொந்த ஊரான சிங்கம்பட்டி வந்து இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை அடுத்த இறஞ்சி என்ற இடத்தின் அருகே சென்றபோது,
கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மோதி விபத்திற்குள்ளனது.இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான அயன்சிங்கம்பட்டி கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.