மதுரை: மதுரை, ஒத்தக்கடை சுற்றி உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் இன்று அகற்றினர். மாட்டுத்தாவணி அடுத்த ஒத்தக்கடை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் நாளுக்கு நாள் இடத்தை ஆக்கிரமித்து புதிது புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு டீக்கடை, இளநீர், உணவகம் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வந்தது. இதனால்,மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று வரும் வாகனங்கள் ஆக்கிரமிப்பு கடைகள் அருகில் நிறுதப்படுவதால், சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலை துறையினர் 15 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கடைகளை காலி செய்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.இந்நிலையில், (ஜூலை.11) தேசிய நெடுஞ்சாலை துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றி விட்டு, கடைகளில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி