தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டி, மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 55; பால் வியாபாரியான இவர், நேற்று முன்தினம் இரவு மருதநால்லுார், அருகே, ‘டி.வி.எஸ்., எக்செல்’ மொபட்டில் சென்றார். அப்போது, சாலை விரிவாக்கப் பணிக்காக, தோண்டப்பட்டிருந்த 10 அடி பள்ளத்தில், மொபட்டுடன் தவறி விழுந்து இறந்தார். இது குறித்து, நாச்சியார்கோவில், காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர். சாலை விரிவாக்கப்பணி செய்யும் ஒப்பந்ததாரர்கள், தடுப்புகள் அமைக்காமல் இருப்பதால் உயிர் பலிகள் தொடர்வதாக மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து காவல் துறையினர், விசாரனை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்