திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் தங்கராஜ் இவரின் நிலத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணம் தயார் செய்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சகாயசெல்வி என்பவர் அய்யம்பாளையம் சார் பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில் மதுரையை சேர்ந்த கிறிஸ்டோபர் சாமுவேல் என்பவருக்கு விற்பனை செய்து மீண்டும் சில தினங்களுக்குள் கிறிஸ்டோபர் சாமுவேல் பெயரில் இருந்த நிலத்தை சகாயசெல்வி தன் பெயருக்கு அய்யம்பாளையம் சார் பதிவாளர் பாலமுருகன் முன்னிலையில் மாற்றம் செய்தது தொடர்பாக திண்டுக்கல் நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் பத்திரப்பதிவு செய்து கொடுத்த பாலமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா