திருவள்ளூர் : பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு. 100%வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி, கையெழுத்து இயக்கம் இன்று செவ்வாய்க்கிழமை 11 மணி அளவில் நடைபெற்றது. இந்திய திருநாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மேலும் வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 100%வாக்குப்பதிவை செலுத்திட வலியறுத்தி ஊழியர்கள் ‘100சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை’ என ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. அவருடன் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு