இராமநாதபுரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி, இ.கா.ப., மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், இ.கா.ப., ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, தேர்வு நடைபெறும் முறை, பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்வர்கள் அடையாள சரிபார்ப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அவர்கள் பரிசோதித்தனர். மேலும், தேர்வு முழுமையாக வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். தேர்வு மையங்களில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போதிய காவல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின்போது, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
















