இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் காவல் நிலையங்களில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார்கள். முதற்கட்டமாக, முதுகுளத்தூர், கடலாடி, R.S.மங்கலம், திருவாடானை, இராமேஸ்வரம் துறைமுகம், உச்சிப்புளி, சாயல்குடி காவல் நிலையங்கள் மற்றும் இராமநாதபுரம், இராமேஸ்வரம் போக்குவரத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி