தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான புலன் விசாரணை திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு பயிற்சி இரண்டு கட்டமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சிறப்பு பயிற்சியில், சார்பு ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் அணுகும் முறை, புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது, காவல் நிலையப்பணிகளை சட்டப்படி அணுகும் முறை , குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்கும் முறை, காவல் பணிகளை முன்னெச்சரிக்கையுடன் கையாளுவது, பொதுமக்களிடம் அணுகும் முறை மற்றும் மன அழுத்தத்தை கையாளும் முறை உள்ளிட்ட பல அறிவுரைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்து, காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.