தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காலை வேளையில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் சீருடையில் முறையாக சாலை விதிமுறைகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வந்த அச்சன்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சின்னத்துரை அவர்களை அழைத்து சாலை விதிமுறைகளை பின்பற்றியதற்கு வாழ்த்து தெரிவித்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார். இதே போல் காவல்துறையினர் பணியில் இருந்தாலும் விடுமுறையில் இருந்தாலும் எப்போதும் முறையாக அனைத்து சாலை விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.