புதுக்கோட்டை: செய்யாறு வெம்பாக்கம் வட்டம்,சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் மணி 61, புளியரம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் 38 சாராய வியாபாரிகளான. இவர்கள் இருவரையும் செய்யாறு,தூசி காவல்துறையினர் அண்மையில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செய்யாறு டி.எஸ்.பி.,திரு.சுரேஷ், காவல் ஆய்வாளர்கள் திரு.அண்ணாதுரை, திரு.பிரபு ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ப.முருகேஷ் உத்தரவின் பேரில் சாராய வியாபாரிகள் மணி,விஜயகுமார் இருவரும் வேலூர் மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.