காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் அடுத்த ஆண்டிமடம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருக்கழுங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ஆண்டிமடம் பகுதியில் பாக்கெட்டுகளில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த கபீர்தாஸ்(40), அமணம்பாக்கம் சண்முகம்(54) இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் சாராய ஊறல் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 130 மது பாட்டில்களையும் கைப்பற்றினர்.340 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அளிக்கப்பட்டது.