கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் போகசந்திரம் கிராமத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டின் அருகே சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் வீட்டின் அருகே சோதனை செய்தபோது சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1லிட்டர் சாராயம், ஊரல் 100 லிட்டர் பறிமுதல் செய்து சாராயம், ஊரல் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.