குமரி: கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மார்க் கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
இதை பயன்படுத்தி குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் சாராயம் வடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நித்திரவிளை அடுத்துள்ள ஆலங்கோடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடம் சென்ற போலீசார் சாராய விற்பனையில் ஈடுபட்ட கொல்லங்கோடு தேரிவிளையை சேர்ந்த சுஜின் என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் ஒரு லிட்டர் சாராயம் 3 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.