கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வண்ணாத்திப்பட்டி பனையூர் ஏரி ஓடைப்புதரில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் வைத்திருந்த நபரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 600 லிட்டர் ஊறல் மற்றும் 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















