கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் மூங்கிலேறி நமச்சிவாயம் என்பவரது தேக்குமர தோட்டம் அருகே உள்ள ஓடையில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 200 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















