தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதிகளில் சிலர் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் புதுக்கோட்டை சரடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் 37. பாபு 40. பெருமாள்32. என தெரியவந்தது. 60 பாக்கெட்டுகளில் அடைத்து பையில் மறைத்து கடத்தி சென்ற 30 லிட்டர் சாராயம் சிக்கியது. அந்த சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.