மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா அறிவுறுத்தலின்படி (5.6.24) ம் தேதி இரவு, கிடைத்த ரகசிய தகவலின்படி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் திருமதி. அன்னை அபிராமி மற்றும் காவல் ஆளிநர்களுடன் செம்பனார் கோவில் காவல் சரகம் காளஹஸ்தினாபுரம் பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அதிவேகமாக வந்த காரினை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, TN 09 AT 9163 Cheverlot காரில் 900 லிட்டர் பாண்டிச் சாராயம் இருந்ததை கைப்பற்றியும், காரினை ஓட்டி வந்த மற்றும் காரில் இருந்த முருகேசன் (24). S/o செந்தில், திருக்களாச்சேரி மற்றும் சுமன் (30) S/o. சுப்பிரமணியன், ஆயப்பாடி ஆகியோரை பிடித்து மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும், மேலும் இதில் தொடர்புடைய செல்வம் (48) S/o. பாண்டியன், மணக்குடி என்பவரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்து, நீதிமன்ற அடைப்புக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.