விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் , நகரைச் சேர்ந்தவர் வெங்கோபராவ் (70), இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். வழக்கம் போல அச்சகத்தை திறக்க, வெங்கோபராவ் சென்றபோது, அச்சகத்தின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார். அச்சகத்தின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் திருடு போனதைக்கண்டு, மேலும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வெங்கோபராவ் சாத்தூர் நகர், காவல்நிலைய காவலரிடம் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த காவலர், சம்பவ இடத்தை பார்வையிட்டு, அச்சகத்தின் கதவை உடைத்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.