திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் சாதிக் கலவரத்தை தூண்ட முயற்சி செய்த கக்கன் நகரை சேர்ந்த முருகன்(26). மந்திரமூர்த்தி(20). ராஜா(26). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய், இ.கா.ப., உத்தரவிட்டார். அதன் பேரில், அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (25.03.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















