சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாவை அறக்கட்டளை, காரைக்குடி உட்கோட்ட காவல்துறை மற்றும் காரைக்குடி ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் R.அண்ணாமலை தலைமை தாங்கினார். பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு N.கோபிச்சந்திரன் முன்னிலை வகித்தார். காரைக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.R.பிரகாஷ், குளோபல் மிஷன் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் குமரேசன் மற்றும் திரு விவேகானந்தன், தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. A.சதீஷ்குமார், காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தினார்கள். முன்னதாக பள்ளியின் போதை ஒழிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முனைவர் ஜெ.பிரகாஷ் மணிமாறன் வரவேற்புரை நிகழ்தினார். முடிவில் பாவை அறக்கட்டளையின் சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஆக்னஸ் பிடோலின் நிகழ்வை ஒருங்கிணைத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி