சென்னை: சென்னை அருகே மாம்பாக்கத்தில் அமைந்துள்ளது. விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளி.
இப்பள்ளியானது ஆர்.வி. சதுரங்க அகாடமியுடன் இணைந்து உலக அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியானது அமெரிக்கா, எகிப்து, ஜெர்மனி, கனடா மற்றும் இந்தியாவிலிருந்து சர்வதேச வீரர்களை ஈர்த்துள்ளது. இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும், சதுரங்க விளையாட்டு வீரர்களும் பங்கேற்று வருகின்றனர். இப்போட்டியினை
பிரபல கல்வி ஆலோசகர் கே.ஆர்.மாலதி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். விழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், விகாஸ் மந்த்ரா பப்ளிக் பள்ளியின் முதல் கிளையானது, 2019 இல் மஹிந்திரா சிட்டியில் உலகத்தரத்தில் நிறுவப்பட்டது எனவும், ஆரம்பத்தில் 250 மாணவர்கள் படித்த நிலையில், 2025 ம் ஆண்டு 1800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் எனவும் கூறினார். நவீன உள்கட்டமைப்பு, முற்போக்கான கற்பித்தல் மற்றும் முழுமையான கல்விக்கு வலுவான முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள அப்பள்ளியின் இரண்டாவது கிளை, மாம்பாக்கத்தில் விகாஸ் மந்திரா பப்ளிக் பள்ளியாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இப்பள்ளியில் சர்வதேச சதுரங்கப்போட்டியை நடத்துவதில் பெருமைகொள்கிறோம் என கூறியவர், சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு அல்ல, வாழ்க்கைத் திறன். இது பொறுமை, விமர்சன சிந்தனை மற்றும் உத்தியை கையாளும் திறனை கற்பிக்கிறது என்றார். இந்த சர்வதேச போட்டியை நடத்துவதன் மூலம், விகாஸ் மந்த்ரா பப்ளிக் பள்ளி இளம் மாணவர்களின் அறிவை கூர்மைப்படுத்தவும், மீள்தன்மையை வளர்க்கவும் ஒரு உலகளாவிய தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது எனவும் பேசினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சதுரங்க போட்டியையும் தொடங்கி வைத்தார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி மாலை வரை இப்போட்டி பல சுற்றுகளாக நடைபெறும். அதில் பிரிவு வாரிவாக வெற்றிபெறும் 170 மாணவர்களுக்கு மொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த சதுரங்க போட்டியை வழிநடத்த எப்.ஐ.டி.இ. பயிற்சியாளர் .வி.ரவிச்சந்திரன் மற்றும் ஆர்.வி.சதுரங்க அகாடமி .வி.ஜெகன் அவர்களும் பங்கேற்றுள்ளனர்.
போட்டியினை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சதுரங்க சங்கமும் இணைந்து வழிநடத்துகிறது. பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற்று வரும்
இப்போட்டியில் பங்கேற்றுள்ள 500 க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே கடுமையான போட்டியும் நிலவுகிறது. விகாஸ் மந்த்ரா பப்ளிக் பள்ளியானது தனது முதல் சர்வதேச FIDE மதிப்பீட்டு சதுரங்ப்போட்டியை ( 1800க்கு கீழே ) நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்