திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில் (07/04/25) அன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் இரு சமூகத்திற்கிடையே ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் வாசகம் அச்சிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த ஏர்வாடி காவல் ஆய்வாளர், சுதா பேனர் வைத்த இரு இளைஞர்களையும் அச்சிட்டு கொடுத்த இளைஞர் ஒருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். இதே போல் கலவரத்தை தூண்டும் வகையில் வாசகங்கள் அடங்கிய பேனர்களையோ, இணையதளத்திலோ பிரச்சனைக்குரிய வாசகங்களை வைத்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர், பிரசன்ன குமார், இ.கா.ப., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்