தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் சரகம் கல்யாணி புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (39). சரித்திர பதிவேடு குற்றவாளி.
இவர் மீது தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரள மாநிலத்திலும் கொலை/கொள்ளை/திருட்டு/அச்சுறுத்தி பணம் பறித்தல் உள்ளிட்ட சுமார் 80 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த (04.11.2025) இவரை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்லும் போது காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்.
தப்பி ஓடியவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் (28.12.2025) அன்று ஊத்துமலை அருகே வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் (22). ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















