கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் குற்றவாளி களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வீயனூர் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவரது மகன் கிருஷ்ணகுமார் 34 என்பவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட காட்டாதுறை பகுதியை சேர்ந்த புனிதராஜ் என்பவர் மகன் சஜிவன் ராஜ் (27). என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு தக்கலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணை பத்மநாபபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று சஜிவன் ராஜுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி, நீதிமன்ற காவலர், மேலும் நீதிமன்ற விசாரணையை சிறப்பாக கண்காணித்த தக்கலை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தக்கலை காவல் ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
















