தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பங்களா சுரண்டை நடுத்தெருவை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருள்ராஜ் ஜெயக்குமார் என்ற கோழி அருள் (52). மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.