திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் உதவி ஆய்வாளா், பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே ஊரை சேர்ந்த கேசவசமுத்திரம் நடுத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (47). என்பவா் ஓட்டி வந்த லாரியை போலீசார் சோதனையிட்டனா். மாரியப்பன் அனுமதியின்றி சட்ட விரோதமாக லாரியில் சரள் மண்ணை எடுத்துச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா், கண்ணன் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்தாா். மேலும், 1 யூனிட் சரள் மண்ணுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்