திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உதவி ஆய்வாளர், முகைதீன் மீரான் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திருமலாபுரம், தெற்கு தெருவை சேர்ந்த அமுல்ராஜ் (36). கருத்தப்பாண்டி (30). ஆகிய இருவரும் குறிச்சிகுளம் பகுதியில் ஜேசிபி வாகனம் மூலம் இரண்டு டிராக்டரில் சரள் மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளி கொண்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அமுல்ராஜ், கருத்தப்பாண்டி ஆகிய இருவருரையும் (07.11.2024) அன்று கைது செய்து அவர்களிடமிருந்து 2 யூனிட் சரள் மணலையும், ஒரு ஜேசிபி வாகனத்தையும் மற்றும் இரண்டு டிராக்டரையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்