திருநெல்வேலி: திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருநெல்வேலி மண்டல துணை வட்டாட்சியர் உமா தலைமையில் வருவாய் ஆய்வாளர் சுடலைபாண்டி, பழையபேட்டை சோதனை சாவடி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், பாலசுப்பிரமணியன், தலைமைக் காவலர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பழையபேட்டை சோதனைச் சாவடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பழையபேட்டையை நோக்கி வந்த டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில், சுமார் 2 யூனிட் சரள் மண் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுநரான பழையபேட்டை சர்தார்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் ( 26). என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய லாரி உரிமையாளரான பழையபேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்