திருப்பூர்: உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை அமராவதி கொழுமம் வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன’ இந்த மலைப்பகுதியில் மாவடப்பு,குளிப்பட்டி, ஆட்டு மலை ,உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளன உடுமலை வனச்சரகத்தில் உட்பட்ட திருமூர்த்தி மலை கிழக்கு வனப்பகுதியில் உள்ள கொட்டை யாரு பகுதியில் 3 யானைகளை சில இளைஞர்கள் கம்பு களாலும் குச்சியாலும் அடித்து ,கற்களால் தாக்கியும் துன்புறுத்தியுள்ளனர், இது அங்கிருந்த சிலர் 20க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து உள்ளனர், அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, இது குறித்து ஆய்வு செய்த வனத்துறையினர் காட்டு யானைகளை துன்புறுத்தியதாக உடுமலை வன சரகத்துக்கு உட்பட்ட மானுப்பட்டி யைஅடுத்த ஈசல் திட்டு பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 25 ) செல்வம் ( வயது 32) அருள்குமார் ( வயது 30.) ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.