திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத்தலைவர், முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப., தலைமையில் (12.11.2024) அன்று திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் நடந்தது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆகியவற்றை ஆய்வு செய்து, இறுதி அறிக்கையை தயார் செய்யவும் புலன்விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.
பின்பு திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் உட்பட 54 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்
N. சிலம்பரசன், இ.கா.ப.,(திருநெல்வேலி) A.சுந்தரவதனம், இ.கா.ப., (கன்னியாகுமரி), ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., (தூத்துக்குடி), வி.ஆர். ஸ்ரீனிவாசன், (தென்காசி), ஆகியோர் நேரிடையாகவும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்