தென்காசி : தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன் இ.கா.ப., திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது காவலர்களின் குறைகளை கேட்டு, தேவையான மின்னணு உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும் தேர்தல் நாளன்று பொதுமக்கள் பாதுகாப்புடன் காலதாமதமின்றி வாக்களிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று முதல் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















