கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் *முனைவர் திரு.மூர்த்தி IPS அவர்கள்* நேற்று (30-11-2024) ஆய்வு மேற்கொண்டர்கள். ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்ட காவல் துறை துணை தலைவர் அவர்கள் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து நான்கு சக்கர இருசக்கர அரசு வாகனங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள்.
மேலும் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள DOG squad, ஆயுத வைப்பறை,பண்டக சாலை, உடற்பயிற்சி கூடம், ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆயுதப்படை சம்பந்தப்பட்ட அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்கள் .மேலும் ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டரிந்தார்கள். மேலும் காவலர்கள் சிறப்பாக பணிபுரிய காவல்துறை துணை தலைவர் அவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சுந்தரவதனம் IPS அவர்கள்* உடன் இருந்தார்கள்.