தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி (15.11.2024) தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு – I, மாவட்ட குற்றப்பிரிவு II, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட காவல் அலுவலக பண்டக பிரிவு, மாவட்ட காவல் அலுவலகம் உட்பட பல்வேறு பிரிவுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.காப அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்து மேற்படி பிரிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பராமரிப்பது குறித்து காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.