திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் (20.12.2022) திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் காவலர்களின் கவாத்து பயிற்சி, உடைமை பொருட்கள், அலுவலகம் மற்றும் காவல்துறையின் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் உடனிருந்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா