திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற சரக்கு வேன் மோதி விபத்து. இந்த விபத்தில் சரக்கு வேனில் வந்த தென்காசி, சுரண்டை பகுதியை சேர்ந்த டிரைவர் வினோத்குமார்(41). இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி வினோத்குமாரின் உடலை மீட்டனர். மேற்படி சம்பவம் குறித்து சுவாமிநாதபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா