திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி புது நகரை சேர்ந்தவர் சுதாகர் வயது (24). இவர் நேற்று தனது நண்பர்களான பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ் வயது 24. சத்யா நகரை சேர்ந்த அருண்குமார் வயது (21). ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பழனி வரதமா நதி பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பழனியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுதாகர் ஒட்டியதாக கூறப்படுகிறது. பழனியில் கொடைக்கானல் சாலையில் வரும்பொழுது, எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரும் தூக்கி வீசி எறியப்பட்டனர். இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும், பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா