திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் காக்காதோப்பு அருகே கோயம்புத்தூரை சேர்ந்த நாடிமுத்து என்பவர் சரக்கு வாகனத்தில் வேடசந்தூர் செல்வதற்கு சரக்கு வாகனத்தை நிறுத்தி வழி கேட்டுக் கொண்டிருந்த போது தூத்துக்குடியில் இருந்து கரூரை நோக்கி சென்ற கண்டைனர் லாரி எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் பின்பக்கமாக மோதியது. இதில் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் சரக்கு வாகனத்தில் வந்த 2 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா