தாம்பரம் மாநகர பல்லாவரம் சரகம் குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுடிவாக்கம் சுடுகாடு அருகில் கண்டைனர் வாகனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்து வருவதாக குன்றத்தூர் காவல் நிலைய காவலர் திரு.காந்தி என்பவருக்கு கிடைத்த தகவலை t5 குன்றத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.சந்துரு அவர்களிடம் தெரிவிக்க அவரின் உத்தரவின் பெயரில் தனிப்படையினர் திருமுடிவாக்கம் சுடுகாடு அருகில் சென்று வாகன தணிக்கை செய்தபோது அந்த வழியாக வந்த 1. TN 73 AZ 1311 EICHER VEHICAL 2. TN 73 AW 2494 EICHER VEHICAL 3. TN 16 C 3403 EICHER VEHICAL 4. TN 21 AM 0301 TATA ACE 5. TN 03 Z 2728 TATA ACE 6. TN 22 CA 9805 TATA ACE 7. TN 11 V 7512 TATA ACE ஆகிய வாகனங்களை ஓட்டி வந்த குற்றவாளிகள் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
மேற்படி வாகனங்களை சோதனை செய்த போது அந்த வாகனங்களில் மொத்தமாக சுமார் ஒரு கோடி மதிப்புள்ள சுமார் 22 டன் குட்கா பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்திய வந்தது இது சம்பந்தமாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலை மறைவு குற்றவாளிகளை பிடிக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆணையாளர் பல்லாவரம் சரகம் அவர்கள் மேற்பார்வையில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குட்கா பொருட்கள் மற்றும் வாகனங்களை கைப்பற்றிய காவல் ஆளுநர்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்