தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம், கோவில்பட்டி, புதுக்கோட்டை, கடம்பூர் ஆகிய 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் முறப்பநாடு, செய்துங்கநல்லூர், சாயர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி (24.06.2024) சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பாமாபத்மினி மற்றும் போலீசார் சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடமும், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. கமலாதேவி மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடுக்குமீண்டான்பட்டி பகுதியில் உள்ள KR சாரதா மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. லதா மற்றும் போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அந்தோனியார்புரம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமுடிமன் பகுதியில் லசால் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், முறப்பநாடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. காவுராஜன் மற்றும் போலீசார் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆராம்பண்னை பகுதயில் மீரா மெட்ரிக் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், செய்துங்கநல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஸ்டான்லிஜான் மற்றும் போலீசார் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பத்து பகுதியில் பொதுமக்களிடமும், சாயர்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அந்தோணி சூசைராஜ் மற்றும் போலீசார் சாயர்புரம் பஜார் பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுவரை 3970 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,27,350 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.