திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மடத்துபட்டி, கீழத் தெருவை சேர்ந்த அயோத்தி மகன் கலையரசன். (20). இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.இது குறித்து தேவர்குளம் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் வழக்கு பதிவு செய்து இரு தரப்பினரிடையே பிரச்சனை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட கலையரசனை (20.09.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்