திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மறக்குடி ரஸ்தா, கீழத் தெருவை சேர்ந்த ஜெகதீஷ் ராஜா (20). என்பவர் சமூக வலைதளமான Instagram-யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது குறித்து மானூர் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, வலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்ட ஜெகதீஸ் ராஜாவை (28.08.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் I.P.S., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்