திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் எட்டான்குளத்தைச் சேர்ந்த கோகுல் (24). முத்து (20). சுடலைமுத்து (18). அந்தோணி ராஜ் (23). ஆகியோர் சமூக வலைத்தளமான INSTAGRAM ல் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் விடியோ மற்றும் புகைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்து பரப்பியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மானூர் காவல் உதவி ஆய்வாளர், சஜீவ் வழக்குப்பதிந்து 4 பேரையும் (18.04.2025) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்