திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது யூசுப் (28). சமூக வலைதளமான Whatsapp – ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து வீரவநல்லூர் காவல் ஆய்வாளர், கௌதமன் வழக்கு பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட முகமது யூசுபை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்