சைபர் கிரைம் குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் வழியாக நண்பர்களாக அறிமுகமாகி பரிசுபொருள் அனுப்புவதாகவும் பரிசுப்பொருட்களை புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள்.
ஒரு சில நாட்களில் அதிகாரிகள் பேசுவது போல் பேசி பரிசுப் பொருள் அனுப்புவது சம்பந்தமாக பணம் கேட்டு அல்லது கொரியர் அனுப்புவது சம்பந்தமாக பணம் கேட்டு நம்பிக்கை ஏற்படுத்துவார்கள். பின் உங்களிடமிருந்து முடிந்த அளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
முன்னெச்சரிக்கைகள்:
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களை நம்பி friend request கொடுத்தால் ஏற்கக்கூடாது.
சமூக வலைதளம் மூலமாக நண்பர்களாக பழகும் நபரை நேரில் சந்திக்கும் வரை நம்பக்கூடாது.
முன்பின் தெரியாத எவரும் தாங்களாக முன்வந்து பரிசு பொருள் தருவதாக கூறினால் நம்பக்கூடாது.
ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும். மேலும் 155260 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.