இராமநாதபுரம்: இராமநாதபுரம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், தங்களது பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் நூலகங்களை முழுமையாக பயன்படுத்தி அறிவுத்திறன் மற்றும் பொதுத் தெளிவை மேம்படுத்த வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS, அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இளைஞர்கள் தினசரி வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தேவையான அறிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குறிப்பாக செய்தித்தாள்கள், பொது அறிவு நூல்கள், தேர்வு வழிகாட்டி புத்தகங்கள் ஆகியவற்றை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
















